ஹன்சிகா, முகேன் ராவ், சாந்தனு நடிக்கும் ‘மை 3′ வெப்சீரிஸ். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 15 ரிலீஸ்!

ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள வெப் சீரிஸ் ‘மை3.’

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சீரிஸ் இது. இந்த சீரிஸ் செப்டம்பர் 15; 2023 அன்று வெளியாகிறது.

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்ளிட்ட காமெடி பிளாக்பஸ்டர் வழங்கிய, பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் இந்த சீரிஸை இயக்கியுள்ளார்.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு ஹன்ஷிகா மோத்வானி இயக்குநர் ராஜேஷுடன் இந்த சீரிஸ் மூலம் இணைந்துள்ளார்.

ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டோரும் இந்த சீரிஸில் நடித்துள்ளனர்.

ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் விதத்தில் உருவாகியுள்ளது.

இந்த ஒரிஜினல் வெப்சீரிஸின் டிரெய்லர் கடந்த செவ்வாயன்று வெளியாகி, சீரிஸுக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here