‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்!

மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் ‘மலைக்கோட்டை வாலிபன்.’ இந்த படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பிறந்த நாளன்று படத்தின் ரிலீஸ் தேதியை மோகன்லால் அறிவித்துள்ளார். அதன்படி படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

படப்பிடிப்பு பணிகள் பாண்டிச்சேரி, சென்னை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 130 நாட்களில் நடைபெற்று நிறைவடைந்தது. திரைக்கதையை பி. எஸ். ரஃபீக் எழுதியுள்ளார்.

படத்தின் பிரத்யேக காணொளி, மோகன்லாலின் பிறந்தநாளன்று வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த படத்தை மேக்ஸ் லேப், செஞ்சுரி பிலிம்ஸ், சரிகம இந்தியா லிமிடெட் மற்றும் ஜான் & மேரி கிரியேட்டிவ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here