ஆல்பம், திரைப்படம் என பல்வேறு துறைகளில் இசைப் பங்களிப்பு செய்து வருபவர் காஷ் வில்லன்ஸ்.
‘ஒரு ஸ்கூட்டர் வண்டி’, ‘ஈகோ’ உள்ளிட்ட ஆல்பங்கள் மூலம் அழுத்தமான அடையாளத்தைப் பெற்றிருக்கும் அவர் தற்போது ‘முடிஞ்சா பூரு’ என்ற பாடலை இயக்கியுள்ளார். யூடியூபில் வெளியாகியுள்ள இந்த பாடல் பிரமாண்டமாக, உலகத் தரத்தில் உருவாகியுள்ளதால் உலகளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
‘‘இந்திய கலைத் தன்மையைத் தாண்டி மக்கள் மனதை எட்டிப் பிடிக்கும் வகையில் இந்த ஆல்பம் உருவாகி உள்ளது” என்கிறார் கேஷ் வில்லன்ஸ்.
பாடல் வரிகளை காஷ் வில்லன்ஸ், மானே வில்லன்ஸ் எழுதியுள்ளனர். எல்விஸ் பிரேம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் வில்லன்ஸ் எடிட்டிங் செய்துள்ளார்.