முன்னணி யூடியூபர் ஹரி பாஸ்கர், பிக்பாஸ் ரயான், பிக்பாஸ்
லாஸ்லியா நடிப்பில், அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,
ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்.’
தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜனவரி 24-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. முன்னதாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் அருண் ரவிச்சந்திரன், ”இயக்குநர் வாசு சாரின் கோ டைரக்டர் சுகுமார் அண்ணன் ஒரு ஷூட்டிங்கில் எனக்கு அறிமுகமானார். அவர் தான் வாசு சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவரிடம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். தயாரிப்பாளர் முரளி சார் இவ்வளவு பெரிய வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி. சுகுமார் அண்ணன் முழுமையாக வந்து வேலை பார்த்துத் தந்தார். லாஸ்லியா இன்ஸ்டா போஸ்ட் பார்த்துத் தான் இந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என அவரைத் தேர்ந்தெடுத்தோம். மிக நன்றாக நடித்துள்ளார். இளவரசு சார் இந்தப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப்படத்தின் ரீரெக்கார்டிங் வந்த பிறகு கண்டிப்பாக இசையமைப்பாளர் பெரிய ஹீரோ படத்தில் வேலை செய்வார். ஹரி பாஸ்கர் என் நண்பர் அவர் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார்” என்றார்.
நடிகை லாஸ்லியா ”இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி. ஒஷா 6 நல்ல பாடல்கள் தந்துள்ளார். அவரை வாழ்த்துங்கள். ரயான் பிக்பாஸ் முடிந்து வந்துள்ளார். அவருக்கு இன்னும் நிறையப் படங்கள் கிடைக்க வாழ்த்துகள். இளவரசு சார், சாரா போன்ற நடிகர்கள் நடிக்கும் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி” என்றார்.
நடிகர் ஹரிபாஸ்கர், ”அருணும் நானும் நண்பர்கள், அவர் சொன்ன லைனை முரளி சாரிடம் சொன்னோம். அவருக்குப் பிடித்திருந்தது. நிதின் சாரும் எங்களுடன் இணைந்து பயணித்தார். அவர் டெக்னிகலாக எல்லாவற்றையும் பிரித்து அலசி விடுவார். அவரிடம் அடுத்துச் சிக்கும் இயக்குநர் தான் பாவம். எல்லோரும் இணைந்து அர்ப்பணிப்போடு இப்படத்தை எடுத்துள்ளோம். லாஸ்லியா மிக அருமையாக நடித்துள்ளார். சாரா அண்ணன் யூடுப்பில் கலக்கிவிட்டு இப்போது சினிமாவில் கலக்குகிறார். அவர் என் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இளவரசு ஒரு லெஜெண்ட், அவர் எங்களுக்கு காட்ஃபாதர் மாதிரி, அவர் எங்கள் படத்தில் நடித்தது பெருமை. அருண் என் நண்பர் எல்லாவற்றையும் மிகத் தெளிவாக அணுகுவார், சுகுமார் அண்ணன், இப்படத்தை மிகச் சரியாகத் திட்டமிட்டது அவர் தான். அவருக்கு நன்றி. கேமரா மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். ஒஷா அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். படத்தில் உழைத்த அத்தனை பேரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி ராமசாமி ”இயக்குநர் அருண் இந்தக்கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி, இறுதியாக முடிவு செய்து தயாரித்துள்ளோம். இப்படத்தை உருவாக்கும்போதே இந்தக்கால டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு இருப்பதுடன், குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். ஹரி பாஸ்கர், லாஸ்லியா, ரயான் என எல்லோரும் இளமையானவர்கள். புதிய இளைஞர்கள் எப்போதும் சாதிக்கும் ஆரவத்துடன் இருப்பார்கள், அவர்களுக்கு வாய்ப்பு வரும் போது கண்டிப்பாகப் பன்மடங்கு உழைப்பார்கள் என்பது, என் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது. இயக்குநர் வாசு சாரிடம் இருந்து வந்தவர் அருண், மிக நன்றாகப் படத்தை உருவாக்கியுள்ளார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.