ரக்ஷா பந்தனையும் சுதந்திர தினத்தையும் கொண்டாட வசதியாக, ‘சூப்பர் யோதா’வாக சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியீடு!

சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, சூப்பர் ஹீரோ ஜானரை முற்றிலும் மறு வரையறை செய்யும் முனைப்பில் இருக்கிறார். தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஹனுமேன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் அடுத்த பெரிய முயற்சியான ‘மிராய்’ படத்திலும் மக்களை மயக்கத் தயாராகி வருகிறார். இந்த பான் இந்தியா ஆக்ஷன்-அடைவேஞ்சர் படத்தில் தேஜா சஜ்ஜா, சூப்பர் யோதா என்ற மாபெரும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார், இந்தப்படம் சூப்பர் ஹீரோ ஜானரை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றும்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான் இந்தியா திரைப்படம், ஆகஸ்ட் மாதத்தில் ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தினம் ஆகிய விடுமுறைகளை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 1-ம் தேதி உலகமெங்கும் 8 மொழிகளில், 2D மற்றும் 3D வடிவங்களில் வெளியிடப்படுகிறது.

படத்தின் வெளியீட்டு தேதி போஸ்டரில், தேஜா சஜ்ஜா பனியால் மூடப்பட்ட மலைச் சிகரங்களின் நடுவில் நின்று, ஒரு இரும்பு கம்பியைப் பிடித்தபடி ஆழமாகப் பார்க்கும் தோற்றம், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

இயக்குநர் கார்த்திக் கட்டமநேனி மிகுந்த கவனத்துடன் புதிய உலகத்தை உருவாக்கி வருகின்றார்.

இந்த படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் மனோஜ் மஞ்சு வில்லனாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் மிக வலுவானதாகவும், மனதில் நிற்கக்கூடியதுமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரித்திகா நாயக் படத்தின் நாயகியாக, தேஜா சஜ்ஜாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

தேஜா சஜ்ஜாவின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு படம் தொடங்கும் முன்பிருந்தே வெளிப்பட்டு வருகிறது. அவர் சூப்பர் யோதா கதாபாத்திரத்தைத் திரையில் உயிர்ப்புடன் கொண்டுவர முழு அர்ப்பணிப்புடன் உழைப்பை கொட்டி வருகின்றார்.

கார்த்திக் கட்டமநேனி படத்தின் ஒளிப்பதிவு, திரைக்கதை ஆகியவற்றைக் கையாளுவதோடு, மணிபாபு கரணம் உடன் இணைந்து வசனங்களையும் எழுதியுள்ளார். கௌரா ஹரி இசையமைக்க, ஸ்ரீ நகேந்திர தங்காலா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். விவேக் குசிபோட்லா இணை தயாரிப்பாளராகவும், சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் சார்பில் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here