‘லவ் டுடே’ இவானா நடிக்க, பாலாவின் உதவி இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கிய ‘மதிமாறன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘லவ் டுடே’ இவானா, வெங்கட் செங்குட்டுவன் இருவரும் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மாறுபட்ட திரில்லர் சப்ஜெக்டில் உருவாகியுள்ள ‘மதிமாறன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

அதில் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களுடன் ஒரு காவலதிகாரி ஜீப்பின் மீது அமர்ந்திருக்கிறார். அது ஆர்வத்தை தூண்டுவதுடன், ரசிகர்களுக்கு ஒரு தரமான திரில்லர் அனுபவம் காத்திருப்பதாக உறுதியளிக்கிறது.

பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இந்தப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தில் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புத்தகத்தின் அட்டையைப் பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே (Don’t judge the book by its cover என்ற உலகின் மிகச்சிறந்த பழமொழிதான் படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை.

பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக்கியுள்ளார் மந்த்ரா வீரபாண்டியன்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் பட ரிலீஸுக்கான நிறைவுஒ பணிகள் நடந்து வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியிட ஏற்பாடாகிறது.

‘பாபின்ஸ் ஸ்டுடியோஸ்’ எனும் புதிய நிறுவனம் தமிழகமெங்கும் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
இயக்கம்: மந்த்ரா வீரபாண்டியன்
தயாரிப்பு நிறுவனம்: ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல்
தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு: பாபின்ஸ் ஸ்டுடியோஸ்
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு: பர்வேஸ் கே
எடிட்டர்: சதீஷ் சூர்யா
கலை இயக்குநர்: வி.மாயபாண்டி சண்டைக்காட்சி: சுரேஷ் குமார்
ஆடை வடிவமைப்பாளர்: கடலூர் எம் ரமேஷ், ஷேர் அலி என் (வெங்கட் செங்குட்டுவன்)
ஒப்பனை: என்.சக்திவேல்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here