தமிழ்த் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமான ‘மர்மர்’ கடந்த வெள்ளியன்று வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்றுள்ளது. அதையடுத்து படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், “இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு என் மீதும், மற்றவர்கள் மீதும் அதிக நம்பிக்கை இருந்தது. அதே நம்பிக்கையை நீங்களும் வைத்தீர்கள். இதனால் தான் இந்தப் படம் இப்படி வந்துள்ளது. என் மீதும், மற்ற அனைவரின் மீதும் நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தை தொடங்கி தற்போது இது வெற்றிப் படமாகவே மாறியிருக்கிறது. வெற்றிக்கு முதுகெலும்பாக நீங்கள் தான் இருக்கின்றீர்கள். அதற்கு மிகப் பெரிய நன்றி.
பலரும், எங்கள் திரைப்படம் குறித்து நல்ல முறையில் எழுதியிருந்தீர்கள். மிக்க நன்றி. நீங்கள் தொடர்ந்து இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களின் பணி என்னைப் போல் மேலும் பலருக்கு ஊக்கமும், உற்சாகத்தையும் அளிக்கும். இதே குழுவுடன் அதிக மேடைகளில் உங்களை சந்திக்க விரும்புகிறேன்”என்றார்.
மர்மர் திரைப்படத்தின் விநியோகஸ்தர் குகன், “இந்தப் படத்தின் தோற்றம், கதைக் கரு என எல்லாமே புதிதாக இருந்தது. தமிழ் திரையுலகில் இது பெரிய வரவேற்பு. முதலில் 100 திரைகள் ஒதுக்கப்பட்டன, அதன்பிறகு ஒவ்வொரு நாளும் திரைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.கே. பிக்சர்ஸ் பிரபாகரன், புரொடக்ஷன் டிசைனர் ஹாசினி உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.
எங்கள் திரைப்படம் குறித்து நல்ல முறையில் எழுதியிருந்தீர்கள். மிக்க நன்றி. நீங்கள் தொடர்ந்து இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.