அவருடைய இசையில் பல படங்கள் நடித்திருந்தாலும் அவரோடு போட்டோ எடுப்பது இதுவே முதல் முறை! -சிம்பொனி நாயகர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்திய நடிகர் முத்துக்காளையின் பரவசம்

லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி பெற்றார். அதையடுத்து தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

எங்கள் ஊருக்கு அருகே உள்ள சத்திரப்பட்டி யில் சிறு வயதில் நான் ஒரு மளிகை கடையில் வேலை செய்யும் போது எதிரே ஒரு ஹோட்டல் கடை. அங்கு அன்னக்கிளி பட பாடல் ரெக்கார்டர் போடும் போது, நான் மளிகை கடையில் எந்த வேலை இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டு அந்த ஸ்பீக்கருக்கு முன்னால் போய் நின்று விடுவேன். அப்படி நின்றதால் கடை ஓனரிடம் பல முறை அடி வாங்கி இருக்கிறேன். அப்படி ஒரு ரசிகன் இல்லை, வெறியன்.

நான் சினிமாவிற்கு வந்த பிறகு பலமுறை அவரை நேரில் பார்த்து இருந்தாலும், 1990 வருடம் பிரசாத் ஸ்டுடியோவில் இயக்குனர் கேயார் அவர்கள் இயக்கும் ஈரமான ரோஜாவே பட பூஜை ரெக்கார்டிங் பார்த்து பிரமித்து போனேன். இப்படி பல அனுபவங்கள்.

நேற்று சிம்பொனி நாயகரை‌ சந்தித்து வாழ்த்து கூறி, ஆசி பெற்ற தருணம். அவருடைய இசையில் நான் பல படங்கள் நடித்து இருந்தாலும் அவரோடு போட்டோ எடுப்பது இதுவே முதல் முறை. மகிழ்ச்சி!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here