மக்களை ஒருங்கிணைக்கும் கலையோடு அம்பேத்கர் வழியில் புரட்சியாக அணிதிரள்வோம்! -கேஜிஎஃப்.பில் உற்சாகமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு

வருடா வருடம் மார்கழி மாதத்தில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் மார்கழியில் மக்களிசை என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.

கடந்த சில வருடங்களில் சென்னை, மதுரை கோவை என்று பல ஊர்களில் நடைபெற்று வந்த இந்த நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதையடுத்து இந்த வருடம் மார்கழியில் மக்களிசை முதல் நிகழ்ச்சி டிசம்பர் 23; 2023 அன்று கேஜிஎஃப்.பில் நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டையில் உற்சாகமாக துவங்கியது.

நிகழ்ச்சியில் நடிகர் தினேஷ், கலையரசன், எழுத்தாளர் தமிழ்பிரபா, இயக்குநர் தினகர், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புத்தர் வாழ்த்தோடு துவங்கிய நிகழ்ச்சியில் இயக்குநர் பா. இரஞ்சித் சிறப்புரையாற்றியபோது, கே ஜி எப் மக்களின் அன்பு என்னை வியக்க வைக்கிறது. தொடர்ந்து இந்த மக்களோடு பயணிக்க விரும்புகிறேன். கலை மக்களை ஒருங்கிணைக்கும். பாபா சாகேப் அம்பேத்கர் வழியில் நாம் பெரும் புரட்சியாக அணிதிரள்வோம்” என்றார்.

நிகழ்ச்சியில் முனுசாமியின் பெரிய மேளம், சித்தன் ஜெய மூர்த்தி குழுவினரின் சித்தன் குணா, வேல்விழி மற்றும் ரவி ஆகிய குழுவினர் பங்கு பெற முதல் நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் ஆரவாரத்துடன் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

அதனை தொடர்ந்து டிசம்பர் 24; 2023 இன்று மாலை 4 மணிக்கு ஓசூரில் (மைதானம், லாவண்யா மஹால் பின்புறம், மத்திகிரி கூட்டு ரோடு) மக்களிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அடுத்ததாக சென்னையிலும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here