கருடன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘மாமன்.’
விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், திருச்சி பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படைப்பாக படத்தை உருவாக்குகிறார்.
சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் மே 16-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக விரைவில் டீசர், டிரெய்லர் வெளியாகவுள்ளது.