எம் ஜி ஆரின் 107-வது பிறந்தநாளையொட்டி திருவுருவப் படத்துக்கு நாசர் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செய்த திரைப்பிரபலங்கள்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி.நகர், அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு இன்று (17.01.2024) காலை 10 மணியளவில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயற்குழு உறுப்பினர்கள் லதாசேதுபதி, மூத்த நடிகை சச்சு, தளபதி தினேஷ், எம் ஏ பிரகாஷ், நடிகர் சவுந்தரராஜா, அனந்தநாராயணன் மற்றும் சங்க மேளாலர் ஏ.தாமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து மரியாதை செலுத்தினார்கள்.

அப்போது பேசிய நாசர், “தென்னிந்திய நடிகர் சங்கத்தினுடைய மிக மிக முக்கியமான அஸ்திவாரம் அய்யா மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள். அவருடைய ஆசியில் வெகு சீக்கீரம் இந்த நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து, எம் ஜி ஆர் எல்லோருடைய பசியையும் போக்க வேண்டும் என்பதே என்னுடைய, எங்களுடைய பிராத்தனை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here