‘பெர்த் மார்க்’ படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக நடித்துள்ள ‘ஜெயிலர்’ பட மருமகள் ‘மிர்னா.’

ஷபீர் கல்லாரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலஷ்மி ஆகியோரின் நடிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியிருக்கும் படம் ‘பெர்த் மார்க்.’

இந்த படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது.

படம் குறித்தும் ஜெனி கதாபாத்திரம் குறித்தும் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் பேசியபோது, “ஜெனி என்ற கதாபாத்திரத்திற்கு நன்றாகத் தெரிந்த, திறமையாக நடிக்கக்கூடிய ஒரு நடிகையைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். அதில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார். கடுமையாக உழைக்கக்கூடியவர் அவர். என்ன சீன் எடுக்கப் போகிறோம், என்னக் காட்சி எடுக்கப் போகிறோம் என்பது குறித்து அவர் எப்போதும் தெளிவாக இருப்பார். படப்பிடிப்பு என்றால் கதைக்கான மூடுக்கு உடனே வந்துவிடுவார். ஜெனிக்கு அவரைத் தவிர வேறு யாரும் பொருந்தியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். மலையாளத்தில் ‘பிக் பிரதர்’, தமிழில் ‘புர்கா’, ‘ஜெயிலர்’ தெலுங்கில் ‘நா சாமி ரங்கா’, ‘உக்ரம்’ போன்றப் படங்களில் நடித்துள்ளார்.

நான் மேலே குறிப்பிட்ட இந்தப் படங்களில் பார்க்காத மிர்னாவை நிச்சயம் ‘பெர்த் மார்க்’ படத்தில் பார்க்கலாம். இயக்குநர், ஹீரோ என நாங்கள் எல்லோரும் எந்த அளவிற்கு உழைப்பைக் கொடுத்துள்ளோமோ அந்த அளவிற்கு மிர்னாவும் கொடுத்துள்ளார். ஏழு மாதம், ஒன்பது மாத கர்ப்பம் என்பதால் கனமான புரோஸ்தெடிக் செய்து கொடுத்தோம். அதை எல்லாம் தாங்கிக் கொண்டு, சிறப்பாக நடித்தார். அவருடைய நடிப்பு இந்த படத்தில் மேலும் மெருகேறி இருக்கும். மக்களுக்கு நிச்சயம் அவரது நடிப்பு பிடிக்கும்” என்றார்.

படைப்பில் பங்களிப்பு:-
இயக்குநர்: விக்ரம் ஸ்ரீதரன்
எழுத்து, தயாரிப்பு: ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன்
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர்: உதய் தங்கவேல்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராமு தங்கராஜ்
படத்தொகுப்பு: இனியவன் பாண்டியன்
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி கண்ணத்
கூடுதல் திரைக்கதை எழுத்தாளர்: அனுசுயா வாசுதேவன்
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமாஸ்
ஒலிக்கலவை: அரவிந்த் மேனன்
கலரிஸ்ட்/ டிஐ: பிரதீக் மகேஷ்,
விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஃபிக்ஸ் இட் இன் போஸ்ட் ஸ்டுடியோ
தயாரிப்பு நிர்வாகி: ரவிக்குமார்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஸ்ரீராம் சிவராமன்
லைன் புரொட்யூசர்: கார்த்தி வேல்
புரொஸ்தெடிக்ஸ்: வினீஷ் விஜயன்
விளம்பர வடிவமைப்பாளர்: கௌதம் ஜே
உதவி இயக்குநர்கள்: டோனி மார்ஷல், சூர்யா விஜயகுமார்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here