மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ பூஜையுடன் தொடங்கியது!

மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், ஐஸ்வர்யா தத்தா நடிக்க, ‘மெட்ராஸ்காரன்’ என தலைப்பிடப்பட்ட புதுமையான திரில்லர் திரைப்படம் எளிமையான பூஜையுடன் தொடங்கியது.

நிகழ்வில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நடிகை ஐஸ்வர்யா தத்தா, படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., தயாரிப்பாளர் ஜகதீஷ், நடிகர் ஹமரேஷ், இயக்குநர்கள் வஸந்த் சாய், பொன்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக் குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

‘ரங்கோலி’ படம் மூலம் பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய இயக்குநர் வாலி மோகன்தாஸ், ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே மையக்கருவாக வைத்து. ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார்.

படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தை பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக எஸ் ஆர் புரொடக்சன்ஸ் பி.ஜகதீஸ் தயாரிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here