உதவித்தொகை பெறுபவர்களில் கிட்டத்தட்ட 60% பெண்கள்!
இந்தியாவின் 29 மாநிலங்களில் உள்ள 603 நகரங்களில் இருந்து 6,019 விண்ணப்பங்கள் பெறப்பட்டன!
தீவிர ஈடுபாடு உள்ள மாவட்டங்களில் இருந்து 150+ விண்ணப்பங்கள் பெறப்பட்டன!
இந்தியாவின் முன்னணி நோயறிதல் ஆய்வகமான மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட்டின் நிறுவன சமூக பொறுப்புப் பிரிவான மெட்ரோபொலிஸ் ஃபௌண்டேஷன், மெட்என்கேஜ் (Metropolis Foundation, MedEngage) வருடாந்திர உச்சி மாநாடு 2024 இன் 6வது பதிப்பை இன்று சென்னையில் நடத்தியது.
மெட்ரோபோலிஸின் சமூக பொறுப்புப் முன்முயற்சியாக, மெட்என்கேஜ் இந்தியாவில் இளம் மருத்துவ மாணவர்களின் திறமைகளை முழுமையாக வளர்க்கும் ஒரு சிறந்த திட்டமாகும். மெட்ரோபோலிஸ் சேர்மன் டாக்டர். சுஷில் ஷாவின் எண்ணத்தில் உதித்த மெட்என்கேஜ், இந்தியாவில் வளர்ந்து வரும் சுகாதாரத் துறை நிபுணர்களுக்கு விரிவான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாநாட்டில், 301 மருத்துவ மாணவர்களுக்கு மொத்தம் 1.7 கோடி ரூபாய் மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டது, அவர்களில் 29 மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கான உதவித்தொகை வழங்கப்பட்டது. மெட்என்கேஜ் உதவித்தொகைகள் மருத்துவக் கல்வியின் அனைத்து ஆண்டுகளிலும் உள்ள இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கும், MD/MS/DNB இன் முதுகலை பயிற்சி மாணவர்களுக்கும், இன்டர்ன்ஷிப் உடன் வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகைகள் கல்வியில் சிறந்த, படிப்பு சாராத செயல்ப்பாடுகள், மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் / ஆய்வறிக்கைகள் ஆகியவற்றில் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் இருந்தது.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசு அலுவலர்கள் திரு.குமார் ஜெயந்த், ஐ.ஏ.எஸ்., தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசின் கூடுதல் தலைமைச் செயலர், டாக்டர். பி. சண்முகப்பிரியா, எம்.டி., நுண்ணுயிரியல் இணைப் பேராசிரியர், நோடல் அதிகாரி (இ-ஆளுமை), தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம், உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மேலும், பல்வேறு சிறப்புத் துறைகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, நாட்டின் வளர்ந்து வரும் மருத்துவத் துறை மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக உரையாற்றினர்.
ஸ்காலர்ஷிப் பெறுபவர்களில் 60% பெண்கள் என்பது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும், இது பாலின வேற்றுமையின்மை உள்ளடக்கிய திட்டத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. மேலும், ஆர்வமுள்ள மாவட்டங்களை மேம்படுத்துவதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் முன்முயற்சிக்கு இணங்க, அத்தகைய மாவட்டங்களில் இருந்து சுமார் 60 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இது சமூக வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை சமமாக அணுகுவதற்கான திட்டத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. வெற்றியாளர்கள் தேர்வு செயல்முறை டெலாய்ட்டால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் உதவித்தொகை பெறுநர்களை கைதேர்ந்த வல்லுனர்களின் திறமை சார்ந்த சோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூடுதலாக, மருத்துவ ஆராய்ச்சி உதவித் தொகைக்கான மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் கலாச்சாரத்தை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுரேந்திரன் செம்மன்கோட்டில் அவர்கள் கூறியதாவது: “இந்தியாவில் மருத்துவத் துறை நிபுணர்களுக்கான தேவை அதிகமாக உள்ள நிலையில், நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் திறன் குறைபாடுகள் பல மருத்துவ மாணவர்களை பாதிக்கிறது.
மெட்ரோபோலிஸ் அறக்கட்டளையின் மெட்என்கேஜ், நிதி உதவி மற்றும் துறை சார்ந்த வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி மற்றும் பன்முகத்தன்மைக்கான எங்கள் சேவை, தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதையும் மேலும் மருத்துவம் சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுமைகளை வளர்ப்பதன் மூலம், அடுத்த தலைமுறைக்கு நோயாளிகளின் பராமரிப்பில் முன்னேற்றம் ஏற்படுத்தவும், சமூக சுகாதார விளைவுகளை மேம்படுத்தவும் நாங்கள் அதிகாரம் அளிக்கிறோம்.”
மெட்ரோபோலிஸ் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் துரு ஷா கூறியதாவது: “மெட்என்கேஜ் ஸ்காலர்ஷிப் திட்டம் எதிர்கால சுகாதார நிபுணர்களை மேம்படுத்துகிறது மற்றும் எதிர்கால தலைமுறையடங்கிய ஆரோக்கியமான, மிகவும் நெகிழ்வான சமூகத்தை வளர்க்கிறது. 29 மாநிலங்களில் உள்ள 603 நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து இந்த ஆண்டு 6,019 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள இளம் மருத்துவ மாணவர்களின் அமோக வரவேற்பைப் பார்ப்பது நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முன்முயற்சியின் மூலம், நாங்கள் கல்வி தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சுகாதார ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் தங்களது எண்ணங்களை தொடரும்போது மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற நம்பிக்கையையும், ஆதரவையும் வழங்குகிறோம்.”
மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேரின் CSR துறையின் தலைமை அறிவியல் அதிகாரியும் குழுத் தலைவருமான டாக்டர். கீர்த்தி சத்தா கூறுகையில், “மெட்என்கேஜ் மெட்ரோபோலிஸின் கொள்கையை உள்ளடக்கியது: எதிர்கால சுகாதாரப் பாதுகாப்புக்கு வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் ஊக்கமளிக்கிறது. இது எங்கள் தலைவரின் தொலைநோக்கு மற்றும் எங்களின் அர்ப்பணிப்பான சமூக பொறுப்பு முயற்சிகளின் விளைவாகும். கடினமாக உழைக்கும் மருத்துவ மாணவர்களுக்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இது செயல்படுகிறது. ஆய்வுகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் தரவுகளை சேகரிப்பதன் மூலம், எங்கள் ஆதரவை நாங்கள் வழங்குகிறோம். டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் மூலம், இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு வலுப்படுத்துதல், மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய சுகாதார மேம்பாடு ஆகியவை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் எங்கள் சேவையை விரிவுபடுத்துகிறோம்.”
மெட்என்கேஜ் உதவித்தொகை திட்டம் தகுதியான மாணவர்களுக்கு நிதி உதவியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நிபுணர் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் உள்ள மெட்ரோபோலிஸின் அதிநவீன ஆய்வகங்கள் மூலம் அனுபவத்தையும் நடைமுறை அறிவை கிடைப்பதை எளிதாக்குகிறது. மேலும், மெட்என்கேஜ்-ஆனது கண்காணிப்பு நிகழ்ச்சிகள், கல்வி ஆராய்ச்சி, ஆய்வக சுற்றுப்பயணங்கள், பயிற்சிகள் மற்றும் MedTalk webinars உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது.
MedEngage பற்றிய மேலும் தகவலுக்கு, பார்வையிடவும் www.med-engage.com.