Multiple Sclerosis என்கிற விசித்திரமான நோய், முதுகுத் தண்டு மற்றும் மூளையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது தனிநபரின் வாழ்க்கையை மிகக் கடுமையாக பாதிக்கிறது. ஒரு சிலர் மட்டுமே நிலைமையை ஏற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள்.
இந்த நிலையில் எம் எஸ் எஸ் ஐ (MSSI – Multiple Sclerosis Society of India) அமைப்பு Multiple Sclerosis நோயினால் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்கிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது. அதன் தொடரச்சியாக Multiple Sclerosis நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள், தொடர்கிறார்கள் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, எம் எஸ் எஸ் ஐ அமைப்பு Calcutta I’m Sorry என்ற திரைப்படத்தின் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
குன்னூரில் இருந்து சென்னைக்கும் (தனது மகளைச் சந்திக்க) கல்கத்தாவுக்கும் (அவரது பேத்தியைச் சந்திக்க) அமண்டா சைக்கிளில் செல்லும் நீண்ட பயணத்தை விவரிக்கிறது திரைக்கதை. மனித இனம் தன் வாழ்க்கைப் பயணத்தில் சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் பாடமாக உருவாகியுள்ளது இந்த படம். உலகம் முழுவதும் பாராட்டுக்களைக் குவித்த இந்த படத்தை Harry MacLure திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிரிசில்லா கார்னர் அமண்டாவாகவும், கில்லியன் பின்டோ, மகள் சப்ரினாவாகவும், கில்லியன் வில்லியம்சன், பேத்தி கல்கத்தா’வாகவும் நடித்துள்ளனர்.
திரையிடல் நிகழ்வை ஸ்ரேயா பி சிங் ஐ ஏ எஸ் (Ms. Shreya P. Singh, IAS / Exec. Dir., TN Corporation for Development of Women, State Mission Director, National Urban Livelihoods Mission, TN. Govt) சிறு உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார்.
எம் எஸ் எஸ் ஐ அமைப்பின் கெளரவ செயலாளர் AnnGonzalvez, எழுத்தாளரும் இயக்குநருமான Harry MacLure உடனிருந்தனர்.
Calcutta I’m Sorry படக்குழு:
இசை, ஒலி வடிவமைப்பு: கணேஷ் ராமண்ணா
ஒளிப்பதிவு, எடிட்டிங்: நிக்கோலஸ் மோசஸ்