பிறந்தநாளில் பலாப்பழ வெட்டு! மன்சூர் அலிகானின் வித்தியாச கொண்டாட்டம்!

தன் பிறந்தநாளில் ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி முன்னுதாரணமாகி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார் நடிகரும் இயக்குநருமான மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் ‘சரக்கு’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இந்த வித்தியாசமான கொண்டாட்டம் அரங்கேறியது. ‘சரக்கு’ படத்தில் மன்சூர் அலிகானுக்கு ஜோடியாக வலினா நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், சேசு, கென்ஸ்லி, யோகி பாலா மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்.‘சரக்கு’ படக்குழு விவரம்:
இயக்கம்: ஜே.ஜெயக்குமார்
இசை: சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்
மக்கள் தொடர்பு: கோவிந்தராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here