முக்தா சில்ஸின் பிரமாண்டமான சென்னை தி.நகர் ஷோரூமை திறந்து வைத்த நடிகை பிரியங்கா மோகன்!

நடிகை பிரியங்கா மோகன், நடிகர் புகழ் இருவரும் முக்தா சில்க்ஸின் 27-வது ஷோரூமை சென்னை தி.நகரில் திறந்து வைத்தனர். நிகழ்வில் முக்தா ஆர்ட் ஸ்டுடியோவின் நிறுவனர் மற்றும் தலைமை வடிவமைப்பாளருமான சஷி வங்கபள்ளி கலந்து கொண்டார்.கிட்டத்தட்ட 15,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் முக்தா சில்க்ஸில் பட்டுப் புடவைகளும் அந்த சூழலும் ஒரு தெய்வீகத் தன்மையை கொண்டுள்ளதாக பிரியங்கா மோகனும் புகழும் தெரிவித்தனர். பார்வையாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் செட்டிநாட்டின் ஸ்பரிசத்துடன் கூடிய அந்த சூழலின் அழகியல் உணர்வைக் கண்டு பரவசமடைந்தனர்.

பிரியங்கா மோகன் தனது ஒளிரும் புன்னகை, வசீகரிக்கும் தோரணைகள் மற்றும் அங்கிருந்த வித்தியாசமான பட்டுப் புடவைகளைபார்த்து நிகழ்வை மேலும் அழகு படுத்தினார்.

அப்போது பிரியங்கா மோகன் பேசும்போது, “ஒரு பெண் ஆடைகளின் மூலம் தனக்கு பாசிட்டிவ்வான உணர்வைப் பெற விரும்பினால் அதற்கு முக்தா சில்க்ஸ் ஷோரூம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பிரமாண்டமான வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்றார்.புகழ் பேசும்போது, “முதன்முறையாக நான் பட்டுப் புடவைகளுக்கான வழிபாட்டுத் தலத்தை நேரில் கண்டு அனுபவிக்கிறேன். நான் ஒரு கோயிலுக்குள் வந்து ஷாப்பிங் செய்வது போன்ற உணர்வை பெறுகிறேன். இந்த பிரமாண்டமான அறிமுகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here