மார்வெல் ஸ்டுடியோவின் ‘தி மார்வெல்ஸ்’ படத்தின், கொடுங்கோல் க்ரீயில் இருந்து தனது அடையாளத்தை மீட்டெடுத்த கரோல் டான்வர்ஸ் அல்லது கேப்டன் மார்வெல், சுப்ரீம் இன்டலிஜென்சை பழி வாங்குகிறார்.
ஆனால். எதிர்பாராத விளைவுகளால் கரோல் நிலைகுலைந்த பிரபஞ்சத்தின் பாரத்தை சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவரது கடமைகள் அவரை ஒரு க்ரீ புரட்சியுடன் இணைக்கப்பட்ட ஒரு அசாதாரண வார்ம்ஹோலுக்கு அனுப்பும்போது, அவரது சக்திகள் ஜெர்சி சிட்டியின் சூப்பர்-ரசிகன் கமலா கான், எனும் மிஸ். மார்வெல் மற்றும் கரோலின் பிரிந்த மருமகள் மற்றும் தற்போது S.A.B.E.R. விண்வெளி வீரர் கேப்டனான மோனிகா ராம்போ உடன் இணைகின்றன. ஒன்றாக, இந்த சாத்தியமற்ற மூவரும் ஒன்றிணைந்து ‘தி மார்வெல்ஸ்’ஸாக இந்தப் பிரபஞ்சத்தை காப்பாற்ற முயலவேண்டும்.
நியா டகோஸ்டா வின் இயக்கத்தில் வெளிவரும் இப்படத்தில் ப்ரி லார்சன், டெயோனா பாரிஸ், இமான் வெல்லானி, சாமுவேல் எல். ஜாக்சன், ஜாவே ஆஷ்டன் மற்றும் பார்க் சியோ-ஜூன் ஆகியோர் நடித்துள்ளனர். கெவின் ஃபைஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். லூயிஸ் டி எஸ்போசிடோ, விக்டோரியா அலோன்சோ, மேரி லிவனோஸ் மற்றும் மேத்யூ ஜென்கின்ஸ் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். மேகன் மெக்டோனல், நியா டகோஸ்டா, எலிசா கராசிக் மற்றும் ஜெப் வெல்ஸ் ஆகியோர் இப்படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளனர்.
மார்வெல் ஸ்டுடியோவின் தி மார்வெல்ஸ் நவம்பர் 10 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
English Link: https://youtu.be/xBukTKAsH2k
Hindi Link: https://youtu.be/LHq6F3UsDDI
Tamil Link: https://youtu.be/cMSUtgb_OH0
Telugu Link: https://youtu.be/2Bh_vw3u1lE