கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘800’ படத்தின் முதல் பார்வை ஏப்ரல் 17-ம் தேதி அவரது பிறந்தநாளில் வெளியானது.

இந்த படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடிக்கின்றனர்.

இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் காட்சிகள் இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தை மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விவேக் ரங்காச்சாரி இணைந்து தயாரித்துள்ளார்.
நடிகர்கள்:
மதுர் மிட்டல்,
மகிமா நம்பியார்,
நரேன்,
நாசர்,
வேல ராமமூர்த்தி,
ரித்விகா,
வடிவுக்கரசி,
அருள் தாஸ்,
ஹரி கிருஷ்ணன்,
யோக் ஜேபி,
சரத் லோஹிதாஷ்வா
தொழில்நுட்ப குழு:
எழுத்து & இயக்கம்: எம்.எஸ். ஸ்ரீபதி,
ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர் ஐ.எஸ்.சி,
இசை: ஜிப்ரான்,
எடிட்டர்: பிரவீன் கே.எல்,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: விதேஷ்,
ஆடை வடிவமைப்பாளர்கள்: பூர்தி பிரவின் & விபின் PR
தோற்ற வடிவமைப்பாளர்கள்: அனிதா மட்கர் & கௌரவ்