ஆர்யாவுக்கு வில்லனாக கவுதம் கார்த்திக்! சண்டைக் காட்சிகளுக்காக உகாண்டா, செர்பியாவுக்கு செல்லும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படக்குழு.

ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) என்ற படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் ‘ எஸ். லஷ்மன்குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

‘எஃப்ஐஆர்’ என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பல சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது.படத்தில் பங்கேற்கும் மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் தெரியவரும்.

படக் குழு:-
இசை – ‘மரகத நாணயம்’, ‘பேச்சிலர்’, ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ்
ஒளிப்பதிவு – தன்வீர் மிர்
படத்தொகுப்பு – பிரசன்னா ஜி.கே.
தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன்
சண்டைப் பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
கலை – இந்துலால் கவீத்
தயாரிப்பு மேற்பார்வை – ஏ.பி. பால்பாண்டி ஆடை வடிவமைப்பு – உத்ரா மேனன்
நிர்வாகத் தயாரிப்பு – ஷ்ரவந்தி சாய்நாத்
இணை தயாரிப்பு – ஏ. வெங்கடேஷ்
மக்கள் தொடர்பு – ஏ. ஜான்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here