அதர்வா – மணிகண்டன் நடிக்கும் ‘மத்தகம்’ வெப் சீரிஸ். ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.

அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் வெப் சீரிஸ் ‘மத்தகம்.’ பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த், முரளி அப்பாஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார்.

மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும்.

இந்த வெப் சீரிஸ் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகவுள்ளது. முன்னதாக அந்த வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

படம் பற்றி இயக்குநர் பிரசாத் முருகேசன் பேசும்போது, ”30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் சீரிஸ் இது.

ஒரு இரவில் நாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தைப் படம் பிடித்தது சவாலானதாக இருந்தது. இந்த சீரிஸ் ரசிகர்களுக்குக் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்” என்றார்.

படக்குழுவினர்:-
இசை – தர்புகா சிவா
ஒளிப்பதிவு – எட்வின் சாகே
எடிட்டிங் – ஆண்டனி
ஆக்சன் காட்சிகள் – திலீப் சுப்பராயன்
கலை இயக்கம் – சுரேஷ் கல்லரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here