தமிழில் சுயாதீன இசை ஆல்பங்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து அப்படியான பாடல்களை தயாரித்து வரும் எம் எம் ஒரிஜினல்ஸ் (MM Originals) நிறுவனம் இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மக்கா மக்கா’ பாடலை வெளியிட்டுள்ளது.
பா விஜய் வரிகளில் உருவான பாடலை பம்பா பாக்யா மற்றும் சத்ய பிரகாஷ் பாடியுள்ளனர்.
நட்பைக் கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள இப்பாடலில் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன், முகேன் ராவ் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் அரசகுமார் இயக்கியுள்ளார்.
யூ டியூபில் வெளியான இந்த பாடல் வைரலாக பரவி வருகிறது. இளைஞர்கள் ப்ளேலிஸ்டில் தவறாது இடம்பிடிக்கும் உற்சாகமிக்க பாடலாகி பெரும் எண்ணிக்கையிலான பார்வைகளை (Views) குவித்து சாதனை படைத்து வருகிறது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
நடனம் – சாண்டி மாஸ்டர்
ஒளிப்பதிவு – RD ராஜசேகர்
எடிட்டிங் – ஆண்டனி
தயாரிப்பு – Etcetera Entertaiment வி. மதியழகன்