ஆர்யா, கவுதம் கார்த்திக்கோடு இணைந்த மஞ்சு வாரியர்! உற்சாகமாய் நடந்த ‘மிஸ்டர் எக்ஸ்’ படத் துவக்கவிழா.

ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சவாலான வேடத்தை ஏற்றிருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ்.’

‘எப்ஐஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த ஆக்சன் படைப்பாக, பான் இந்திய படமாக ‘மிஸ்டர் எக்ஸ்’ உருவாகிறது.

இந்த படத்தில் பிரபல நடிகை மஞ்சு வாரியர் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. அதை தொடர்ந்து இன்று படத்தின் துவக்க விழா நடைபெற்றது.

இந்த படத்திற்காக இந்தியா, அசர்பைஜான் மற்றும் ஜாரிஜியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படும் அதிரடி சண்டை காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைக்கிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ்’ எஸ்.லஷ்மன்குமார் இந்த படத்தை உயர் தொழிநுட்பத் தரத்தில் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் தெரியவரும்.

உருவாக்கத்தில் உறுதுணை:-

கதை, இயக்கம் ; மனு ஆனந்த்

இணை தயாரிப்பாளர் – A.வெங்கடேஷ்

தயாரிப்பு நிறுவனம் ; பிரின்ஸ் பிக்சர்ஸ்

இசை – திபு நிணன் தாமஸ்

ஒளிப்பதிவு – தன்வீர் மிர்

படத்தொகுப்பு – பிரசன்னா GK

தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன்

தயாரிப்பு மேற்பார்வையாளர் – A P பால் பாண்டி.

தயாரிப்பு நிர்வாகி – ஷ்ரவந்தி சாய்நாத்

சண்டைப் பயிற்சி – ஸ்டண்ட் சில்வா.

கலை – இந்துலால் கவீத்.

ஆடை வடிவமைப்பு – உத்தரா மேனன்

மக்கள் தொடர்பு – A.ஜான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here