அள்ளி சாப்பிடுங்க; அழகா இருங்க! சலுகைகளை அறிவித்த ‘நேச்சுரல்ஸ்’ – ‘ஜூனியர் குப்பண்ணா’ நிறுவனங்கள்!

இந்தியாவின் தலைசிறந்த சலூனான ‘நேச்சுரல்ஸ்‘, பிரபல அசைவ உணவகமான ‘ஜூனியர் குப்பண்ணா‘ இரண்டும் இணைந்து ‘நன்றாக உண்ணுங்கள், அழகாக இருங்கள்‘ என்கிற பிரச்சார செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன!

இந்த இரு நிறுவனங்களின் ஒப்பந்தப்படி,நேச்சுரல்ஸின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டு அதற்காக 500 ரூபாய் அல்லது அதற்கு மேல் கட்டணம் செலுத்தினால் பிரியாணிக்கு புகழ்பெற்ற ஜூனியர் குப்பண்ணாவில் 15% தள்ளுபடி வழங்கப்படும்.1000 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தும்போது 20% தள்ளுபடியும் இலவசமாக லைம் மிண்ட் குளிர்பானமும் பெறமுடியும். இந்த சலுகை இரவு உணவுக்கு மட்டுமே பொருந்தும்.

அதேபோன்று ஜூனியர் குப்பண்ணாவில் 500 ரூபாய்க்கு மேல் உணவருந்தினால் நேச்சுரல் சலூனில் 15% தள்ளுபடியும், 1000 ரூபாய்க்கு மேல் உணவருந்தினால் 20% தள்ளுபடியும் 2 நெயில் பாலீஷ் கட்டணமின்றியும் பெற முடியும்.

இந்த சலுகை சென்னையில் உள்ள அனைத்து நேச்சுரல்ஸ் சலூன் & ஜூனியர் குப்பண்ணா விற்பனை நிலையங்களிலும் வழங்கப்பட உள்ளது.

‘அள்ளி சாப்பிடுங்க; அழகா இருங்க’ என்பதுபோல் படு வித்தியாசமான சலுகைகளை அறிவித்துள்ளது பற்றி பேசிய, நேச்சுரல்ஸ் சலூனின் நிறுவனர் சி.கே. குமரவேல், பிராண்டுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு எவ்வாறு தொடங்கியுள்ளது என்பதை விரிவாக குறிப்பிட்டதோடு, ”கொரோனா அனைத்து தொழில்முனைவோருக்கும் ஒற்றுமையாக இருக்க ஒரு பாடத்தை பயிற்றுவித்திருக்கிறது. மக்கள் பிராண்டை விரும்பும் காலம் மாறி, பிராண்ட்டுகள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டிய காலம் உருவாகி உள்ளது. அந்தவகையில் நேச்சுரல்ஸ் மற்றும் ஜூனியர் குப்பண்ணா ஆகிய பிராண்ட்களின் முன்னுரிமை வாடிக்கையாளர்களை உள்ளடக்கியது” என்றார்.

ஜூனியர் குப்பண்ணா உணவக இயக்குநர் பாலச்சந்தர், பெண்களுக்கு சிறப்பு வாய்ந்த மார்ச் மாதத்தை கொண்டாட இரண்டு பெரிய பிராண்டுகள் ஒருங்கிணைந்தது குறித்துப் பேசினார். விடுமுறை நாட்களில் குடும்பங்களும் குழந்தைகளும் கூடி இந்த ஒத்துழைப்பை அனுபவிக்கலாம். உணவும் அழகும் அனைத்து மனிதர்களின் உணர்வோடு கலந்தது. அதனால் இரண்டு பிராண்டுகளும் அறிவித்துள்ள இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமானது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here