சமுத்திரகனி, அனன்யா, பாரதிராஜா நடிப்பில் புதிய படம்! நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகிறது.

சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தை நந்தா பெரியசாமி இயக்குகிறார். இந்த படம் மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்குக் காட்சி பதட்டமாக திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் சப்ஜெக்டில் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 12.5. 2023 அன்று துவங்கியது.

கேரள எல்லையில் மேகமலை,  குமுளி, மூணாறு பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே சமுத்திரக்கனி மொத்தமாக தேதிகள் தந்து முழு ஈடுபாட்டுடன் இந்த படத்தில்  முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனன்யா நாடோடிகள் படத்திற்கு பிறகு சமுத்திரகனி படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் தெரியவரும்.

‘சீதா ராமம்’ படப்புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சினேகன், இயக்குநர் ராஜுமுருகன், இளங்கோ கிருஷ்ணன் பாடல்களை எழுதுகின்றனர். மைனா படப்புகழ் ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here