இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்விகி மற்றும் ஸொமேட்டோ வாகன ஓட்டிகளுக்கு நம்ம வீடு வசந்தபவன் நடத்திய பாராட்டு விழா!

இந்தியாவிலேயே முதன்முறையாக ஸ்விகி மற்றும் ஸொமேட்டோ உணவு விநியோக வாகன ஓட்டிகளுக்கு (Food Delivery Riders) நன்றி தெரிவிக்கும் நிகழ்வு 06.06.2023 அன்று சென்னை வடபழனி 100 அடி ரோட்டில் உள்ள நம்ம வீடு வசந்த பவனில் நடந்தது.‘நம்ம வீடு வசந்த பவன்’ தனது நிறுவனத்தின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி மேற்குறிப்பிட்ட நிகழ்வை நடத்தியது.நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ‘நம்ம வீடு வசந்த பவன்’ செயல் தலைவர் ஹரிஷ், ஸொமேட்டோ தலைவர் சக்தி, ஸ்விகி தலைவர் சுந்தர், ‘நம்ம வீடு வசந்த பவன்’ சேர்மன் ரவி முத்து கிருஷ்ணன், மேனேஜிங் டைரக்டர் ஸ்வர்ணலதா ரவி, இயக்குநர் ஆனந்த் ரவி ஆகியோர் பங்கேற்றனர். மழை, வெயில், கொரோனா காலம் என எதுவும் பாராமல் உழைத்து வரும் ரைடர்களை சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினார்கள். இப்படியான முன்னுதாரண நிகழ்வை முன்னெடுத்து நடத்தியதற்காக பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து வசந்த பவனுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here