பூர்வீகச் சொத்தில் அமானுஷ்யம் மர்மம் திகில்… ‘நேற்று நான் இன்று நீ’ படத்தின் பரபரக்கும் கதைக்களம்!

திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியிருக்கும் பி. நித்தியானந்தம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘நேற்று நான் இன்று நீ.’

கல்வித் துறையிலும் பத்திரிக்கை துறையிலும் பயணித்து வரும் ‘தேசத்தின் குரல்’ பத்திரிக்கை நிறுவனர் ஹெச். பாட்சா இந்த படத்தின் மூலம் திரையுலகிலும் தன் பயணத்தைத் துவங்கியிருக்கிறார். அவரது ‘அப்பா டாக்கீஸ்’ நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது.

குறுகிய கால அளவில், குறைந்த முதலீட்டில், நல்ல கதைகளையும் நடிகர் நடிகைகளையும் நம்பி, தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போடு, தரமான திரைப்படங்கள் தயாரிப்பதை அப்பா டாக்கீஸ் நோக்கமாக கொண்டிருக்கிறது. அதன் துவக்கமே இந்த படம்.

புதுமுகங்கள் ஆதித், வினிதா, தமீம், வினுபிரியா மற்றும் ஆர். அரவிந்தராஜ், பிஜாய் மேனன், ஹெ. பாட்சா ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.

அயல்நாட்டிலிருந்து தன் தாய் மண்ணுக்கு பூர்வீகச் சொத்தை அடைய வந்த நாயகி எதிர் கொள்ளும் அமானுஷ்ய சம்பவங்களையும், மர்மங்களையும் தெய்வ சக்தியையும் சொல்லும் படைப்பாக சுவாரஸ்யமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

குடும்பத்தோடு கண்டு ரசிக்கும்படியான இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
வசனம் – முல்லை செல்வராஜ்
ஒளிப்பதிவு – இ. ஆம்ஸ்ட்ராங்
இசை – ஜெகன் கல்யாண்
படத்தொகுப்பு – ஜோன்ஸ் ஃபெர்னான்டோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here