நடிகை நீலிமாவின் ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ அழகு நிலையத்தை திறந்து வைத்த பாடகர் எஸ்பிபி சரண்!

‘நான் மகான் அல்ல’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை நீலிமா இசை, சென்னை ஆர். கே. சாலையில் ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை தொடங்கியிருக்கிறார்.

இந்த அழகு நிலையத்தை எஸ் பி சரண் திறந்து வைத்தார். தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல் மற்றும் சி. கே. குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு, நடிகை நீலிமா இசை மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். வண்ணத்திரை, சின்னத்திரை, டிஜிட்டல் திரை ஆகிய திரைகளில் தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகை நீலிமா இசை, புதிதாக ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ எனும் அழகு நிலையத்தை தொடங்கியதன் மூலம் தன்னுடைய சேவையை இளம்பெண்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் பெண்மணிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கிறார்.

தொடர்ந்து புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் இறங்கி பணியாற்றி வருகிறார். அவரது புதிய முயற்சிக்கு பல தரப்பிலிருந்தும் சமுக வலைதளங்கள் வழியாகவும் வாழ்த்துகள் குவிகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here