அழகு சாதன உற்பத்தி துறையில் சாதனை படைக்க களமிறங்கும் நடிகை நயன்தாரா! செப்டம்பர் 29-ல் வணிக முத்திரை வெளியீடு.

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள்.

‘9 ஸ்கின்’ என பெயரிடப்பட்டிருக்கும் இவர்களது அழகு சாதன பொருட்களின் வணிக முத்திரையை, மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் வரும் செப்டம்பர் 29-ம் தேதியன்று வெளியிடுகிறார்கள்.

சரும பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் டெய்சி மோர்கனுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கூட்டணியமைத்து, தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும், சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை உயர் தரத்துடன் வழங்குவதன் மூலம் தொழில் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் நுழைவதன் மூலம் அவர்களுடைய பிராண்டான ‘9 ஸ்கின்’- இயற்கையான அழகை மேம்படுத்தும் புதுமையான தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை வழங்கவிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here