சரத்குமார், சசிகுமார் நடிக்கும் ‘நா நா’ டிசம்பர் 15-ம் தேதி ரிலீஸ்! ஆக்‌ஷன், திரில்லர் விரும்பிகளுக்கு முழுமையான விருந்தாக இருக்கும் என படக்குழு உறுதி.

‘அயோத்தி’ படத்தின் மூலம் சசிகுமாரும், ‘பொன்னியின் செல்வன்’, ‘போர் தொழில்’ படங்களில் நடித்ததன் மூலம் சரத்குமாரும் பெரியளவிலான வெற்றியை பெற்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் கல்பதரு பிக்சர்ஸ் பி கே. ராம் மோகன் தயாரிப்பில், என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் ‘நா நா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

2023 ஆம் ஆண்டில் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவரும் தங்கள் சிறந்த நடிப்பைக் கொடுத்து, வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஆக்‌ஷன், திரில்லர் என்டர்டெய்னர்களை விரும்புவோருக்கு இந்த படம் ஒரு முழுமையான விருந்தாக இருக்கும். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை பார்வையாளர்களை ஈர்க்கும்’ என்று படக்குழுவினர் உறுதியாக சொல்கின்றனர்.

படைப்பில் பங்களிப்பு:-
தயாரிப்பாளர்: பி.கே.ராம் மோகன்
நிர்வாக தயாரிப்பாளர். : வினோத் குமார் எஸ்
எழுத்து, இயக்கம்: என்வி. நிர்மல்குமார்
ஒளிப்பதிவாளர்: கணேஷ் சந்திரா
பாடல்கள் இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
பின்னணி இசை: அஸ்வமித்ரா & கவாஸ்கர் அவினாஷ்
எடிட்டர்: ஆகாஷ் அஸோம்
கலை இயக்குநர்: ஆனந்த் மணி, மணிவாசகம்
கதை: பூபதி ராஜா, என்வி நிர்மல்குமார்
வசனம்: பூபதி ராஜா, தயாநிதி சிவக்குமார் நெய்வேலி பாரதிகுமார் & சுருளிப்பட்டி சிவாஜி (கிராமப் பகுதி)
ஸ்டண்ட் டைரக்டர்: சக்தி சரவணன்
நடன இயக்குநர்: அஜய் சிவசங்கர், லீலாவதி
பாடல் வரிகள்: ஏக்நாத், எரவி, யூகி பிரவின், ஜெயந்தி அஸ்வமித்ரா
ஆடைகள்: சாரங்கன்
மேக்கப் மேன்: தினகரன்.டி
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here