பார்ட்டி கொண்டாட்டத்தில் மர்மமாக காணாமல்போன நண்பன் என்ற ஒன்லைனில் பரபரப்பு கூட்டும் ‘நேற்று இந்த நேரம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

‘பிக்பாஸ்’ ஷாரிக் ஹாசன் கதாநாயகனாகவும் ஹரிதா, மோனிகா ரமேஷ் கதாநாயகிகளாகவும் நடித்துள்ள படம் ‘நேற்று இந்த நேரம்.’

பார்ட்டி கொண்டாட போன இடத்தில் நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போக, அதன் பின்னணியில் நடக்கும் அதிரவைக்கும் சம்பவங்களே கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதை.

படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை நித்தின் ஆதித்யா, சாய் ரோஷன் கே.ஆர். இருவரும் இணைந்து எழுத, சாய் ரோஷன் கே.ஆர். இயக்கியிருக்கிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வரவேற்பு பெற்று வருகிறது.

பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர். படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் பெற்றுள்ளது.

படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.

படம் ஜனவரி 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படக்குழு:
இசை: கெவின்.என்
ஒளிப்பதிவு: விஷால் மணிவண்ணன்
படத்தொகுப்பு: கோவிந்த்என்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here