இசைத் திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித்தர முன்வந்த ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்.’ மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ பட விழாவில் அறிமுகமாகும் ‘நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்.’

டைனமிக் பொழுதுபோக்கு நிறுவனமான ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ பல்வேறு வழிகளில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை செய்து வருகிறது. அந்த வரிசையில் ‘நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்’ என்ற பெயரில் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும், வளர்ந்து வரும் இசைத் திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித்தர ஒரு தளத்தை துவங்குகிறது.

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் சொந்த தயாரிப்புகளில் இருந்து அற்புதமான இசையமைப்புகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், ஒலிப்பதிவு உலகில் புதிய மற்றும் மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டு வரும் சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து இசைத் துறையில் ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்குவதை ‘நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்’ நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ நிறுவனர் மற்றும் புரொடியூசர் ராமச்சந்திர சக்கரவர்த்தி இதுபற்றி கூறும்போது, ‘‘இந்த மியூசிக் லேபிள் கலை மற்றும் ஆக்கப்பூர்வ ஆய்வுக்கான தளமாக உருவாக்கியுள்ளோம். உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகெங்கிலும் உள்ள விதவிதமான இசைத்துணுக்குகள் மற்றும் மாறுபட்ட ஒலிப்பதிவுகளின் தொகுப்பை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்” என்றார்.

மம்முட்டி நடிப்பில், கிறிஸ்டோ சேவியரின் இசையில் உருவாகியுள்ள ‘பிரம்மயுகம்’ என்ற மலையாள திரைப்பட விழாவில் ‘நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்’ அறிமுகமாகவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here