கேரள டோவினோ தாமஸுடன் நம்மூர் சேரன் நடித்துள்ள ‘நரிவேட்டை’ மே 23-ல் ரிலீஸ்!  

டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் மே 23, 2025 அன்று வெளியாகிறது.

அனுராஜ் மனோகர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, ‘சாகித்ய அகாடமி விருது’ பெற்ற அபின் ஜோசப் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அழுத்தமான கதை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான கதைசொல்லலுடன் தரமான நடிப்பை வழங்கும் கலைஞர்களுடன் சிறப்பான அனுபவத்தை வழங்கவுள்ளது.

‘நரிவேட்டை’ திரைப்படத்தில் டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சராமூடு, முதன்முதலாக மலையாளத்தில் அறிமுகமாகும் இயக்குனர் சேரன் ஆகியோருடன் பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம் ஆகியோர் துணை கதாபாத்திரத்திரங்களில் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பான கதையம்சத்தை கொண்ட இத்திரைப்படத்தை இந்தியன் சினிமா கம்பெனி சார்பில் திப்பு ஷா, ஷியாஸ் ஹாசன் தயாரித்துள்ளனர். 132 நிமிடம் ஓடக்கூடிய இந்த படம் சுருக்கமான படத்தொகுப்பு, இதமான ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜாயின் அதிரடியான பின்னணி இசையில் ரசிகர்களை கவர்ந்திழுக்க தயாராக உள்ளது.

இந்த படத்தை தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் ஏ.ஜி.எஸ் நிறுவனம்  தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here