நொய்டா சர்வதேச திரைப்பட நகர அடிக்கல் நாட்டு விழா… பிரதமருக்கு தயாரிப்பாளர் போனி கபூர் அழைப்பு!

நொய்டாவில் அமைய இருக்கும் சர்வதேச திரைப்பட நகரத்தைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு உ.பி. முதலமைச்சர் ஆகியோரை தயாரிப்பாளர் திரு. போனி கபூர் கேட்டுக் கொண்டார்.

இந்த திரைப்பட நகரத்தின் முதல் கட்ட வடிவமைப்பினை யமுனா ஆணைம் ஜூன் 9, 2025 அன்று அங்கீகரித்து, அன்றைய தினமே அதற்கான கடிதத்தையும் வெளியிட்டது. (கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது). மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் ஆகியோரின் ஆசியுடன், அடிக்கல் நாட்டும் விழா நடைபெற இருக்கிறது. விரைவில் விழா தேதி உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், நமது நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள திரைப்படத் துறையுடன் தொடர்புடைய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் முறையான அழைப்பு கிடைக்கப் பெற செய்து விரைவில் விழா மிகவும் பிரமாண்டமாகவும் மற்றும் கண்ணியமாகவும் நடக்க ஏற்பாடு செய்யப்படும்.

-உண்மையுடன்,

பே வியூ பூடானி,
போனி கபூர்,
பிரேம் பூடானி,
ஆஷிஷ் பூடானி,
ராஜீவ் அரோரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here