‘இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்!’ -‘நாதமுனி’ படத்தை பாராட்டி இசையமைத்த இளையராஜா

இந்திரஜித் கதாநாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான்விஜய், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘நாதமுனி.’

இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவிடம் இயக்குநர் மாதவன் கதை சொன்னபோது படத்தின் கருவும், நோக்கமும் அவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

‘இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றும் பாராட்டிய அவர், படத்திற்கு முத்தான பாடல்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”சாமானிய மனிதர்களின் அறமும், சீற்றமும் சக மனிதர்களின் செயல்களால் எவ்வாறு வினைபுரிகிறது என்பதை மையமாக வைத்து கருத்தாழமிக்க படைப்பாக உருவாக்கியிருக்கிறோம்.

சாமானிய தகப்பனாக இந்திரஜித் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். ஏழைத்தாயாக ஐஸ்வர்யா தத்தா வாழ்ந்திருக்கிறார். மற்ற அத்தனை நடிகர், நடிகைகளும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள்” என்றார்.

பாடல்களை இளையராஜா, கங்கைஅமரன் இருவரும் எழுதியிருக்கிறார்கள். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

படக்குழு:
தயாரிப்பு: 369 சினிமா
ஒளிப்பதிவு: ஏ குமரன்.
படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்
கலை: கே ஏ ராகவா குமார்
சண்டைப் பயிற்சி: டேஞ்சர் மணி
நடனம்: சங்கர்
மக்கள் தொடர்பு: குணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here