Home Uncategorized மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப் பேசும் ஹாரர் திரில்லர் படைப்பான ‘நறுவீ’ ஆகஸ்ட் 29-ம் தேதி ...

மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப் பேசும் ஹாரர் திரில்லர் படைப்பான ‘நறுவீ’ ஆகஸ்ட் 29-ம் தேதி  ரிலீஸாகிறது!

மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப் பேசும் ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள ‘நறுவீ’ வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், சமூக அக்கறை கருத்துக்களுடன், ரொமான்ஸ் காமெடி கலந்து பரபரப்பான ஹாரர் திரில்லர் படைப்பாக படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் எம் சுபாரக்.

மருத்துவம் படித்து முடித்துவிட்டு, தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை ஊட்டி குன்னூர் போன்ற இடங்களில் மொத்தம் 60 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் இல்லாத மலை கிராமங்களில் பெரும் சிரமத்துக்கு இடையே ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இரவு பகல் பாராமல் படக்குழு பணியாற்றி இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறது.

மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில் இந்த படத்தை தயாரித்துள்ளார் ஏ அழகு பாண்டியன்.

எஃப் ஐ ஆர் திரைப்படத்தின் மூலம் சிறப்பான இசையை தந்த அஸ்வத் இசையில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

படத்தை பாஸ்கர் சினிமா கம்பெனி _ ஷிவானி ஸ்டூடியோஸ் இணைந்து தமிழகமெங்கும் திரையரங்க வெளியீடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்