நடிகை அபிராமி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இணைய தொடர், ‘ஒரு கோடை Murder Mystery.’ ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே தனித்துவமான படைப்புகளை வழங்கிவரும் இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த வெளியீடாக இந்த தொடரை வரும் 21-ம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது. விஷால் வெங்கட் இயக்கியுள்ள இந்த தொடரை ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ளனர். ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைக்கதை வசனத்தை என். பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர்.இந்த தொடரின் பத்திரிகையாளர்களை சந்திப்பில் நடிகை அபிராமியுடன் ZEE5 நிறுவனத்தின் சார்பில் சிஜு பிரபாகரன், கௌசிக் நரசிம்மன், ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், இசையமைப்பாளர் சுதர்சன்என். குமார், நடிகர் ஆகாஷ், நடிகைகள் லிசி ஆண்டனி, அபிதா, நடிகை நர்மதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நடிகை அபிராமி பேசியபோது, ”இது எனது முதல் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ்க்கு அணுகும்போதே முழு திரைக்கதையும் தந்தார்கள். எனக்கு மர்டர் மிஸ்டரி ரொம்ப பிடிக்கும். இதன் திரைக்கதை மிகவும் பிடித்தது. இதில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களும் மிகச்சிறந்த திறமைசாலிகள், அவர்களின் திறமையால் அழகாக இதனை உருவாக்கியுள்ளார்கள். பொதுவாக ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் போது, டைட்டில் கேரக்டர் நடிப்பார்கள். ஆனால் நான் இந்த வெப் சீரிஸ் நடிக்க காரணம் இதன் திரைக்கதை தான், அவ்வளவு அற்புதமாக இருந்தது. டீனேஜ் பசங்களின் உலகை அவ்வளவு தத்ரூபமாக எழுதியிருந்தார்கள் அதே போல் என் கதாபாத்திரம் அம்மா பாத்திரம் அத்தனை அழகாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.
இயக்குநர் விஷால் வெங்கட் பேசும்போது, ”சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்கு நீங்கள் மிகப்பெரிய ஆதரவைத் தந்தீர்கள் அதற்கு மிகப்பெரிய நன்றி. இந்த வெப் சீரிஸ் இயக்கச் சொல்லி ஜீ5 யிலிருந்து கால் வந்தது. மிகக்குறைந்த காலகட்டத்தில், இந்த வெப் சீரிஸை எடுத்தோம். அதற்கு ஒளிப்பதிவாளர், எடிட்டர், குழுவினர் அனைவரும் மிகப்பெரும் தூணாக இருந்தார்கள். இந்த சீரிஸில் நடித்த டீனேஜ் பசங்க அனைவருமே பிரமிக்க வைத்தார்கள். சீரிஸ் நன்றாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.நிகழ்ச்சியில் நடிகர் ராகவ்வின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.