புருஸ்லீ ராஜேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஸ்ரிதா சுஜிதரன் நடிக்கும் படம் ‘ஒரே பேச்சு, ஒரே முடிவு.’ இந்த படத்தில் தலைவாசல் விஜய், சம்பத் ராம், மீசை ராஜேந்திரன், ஐ.எம்.விஜயன், கராத்தே ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் இணையும் கதாநாயகன், அதில் தனது பள்ளிப் பருவ காதலி இருப்பதை அறிந்து, அவளை சந்திக்க அவள் கணவன் இல்லாத நேரத்தில் செல்கிறான். அப்போது அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து திரைக்கதை நகர்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் பிரபல மலையாள இயக்குநர் வி.ஆர்.எழுதச்சன்.
இரண்டு பாடல்கள், ஐந்து சண்டைக் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
படக்குழு: ஒளிப்பதிவு: ஆதர்ஷ் பி.அனில், இசை: யூ.எஸ்.டீக்ஸ், மக்கள் தொடர்பு: கோவிந்தராஜ்