தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI – பெப்சி) சார்பில் இன்று (01.05.2023) வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மே தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பெப்சி தலைவர் ஆர்கே.செல்வமணி தலைமை ஏற்க, தமிழ்நாடு அமைச்சர் சி. வி. கணேசன், எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியின் தலைவர் நடிகர் ராஜேஷ், முன்னாள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.