ல. ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி, ஆஹா’ ஓடிடியில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பேட்டைக்காளி’ வெப்சீரிஸை தயாரித்த ‘முத்தமிழ் கலைக்கூடம்’ நிறுவனம், நடிப்பு பயிற்சிப் பட்டறையை தொடங்குகிறது.
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், நடிகர்களை வைத்து நடத்தப்படும் இந்த பயிற்சியில் பாரம்பரியமான நடிப்புக் கலையை கற்றுத்தரும் பாடத் திட்டங்கள் வகுத்திருக்கிறார்கள்.மேடை பயத்திலிருந்து வெளிவருவது, உணர்வுகளை வெளிப்படுத்தும் முறை, உடல் மொழி, பாவனைகள் – இப்படி நடிகருக்கு தேவையான எல்லா வழிமுறைகளையும் நுட்பமாக அணுகுகிறார்கள்.
பயிற்சியின் நிறைவில் முன்னணி இயக்குநர்கள் முன்னிலையில் அரங்கேற்றமும் நடக்கவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள: 73056 52926