கலைஞர் தொலைக்காட்சியில் ‘பொன்னி C/O ராணி.’ பொன்னியை பழிவாங்க துடிக்கும் மாயாவின் அடுத்த திட்டம் என்ன?

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் ‘பொன்னி C/O ராணி.’ பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடரில் பொன்னியை பழிவாங்க துடிக்கும் மாயா, பொன்னியின் தந்தையான வேலுச்சாமியை வைத்து அடுத்ததாக காய் நகர்த்த திட்டமிட்டிருக்கிறார்.

இதில், வேலுச்சாமி தான் மாயாவுக்கும் தந்தை என்கிற உண்மை ராஜாராமுக்கு தெரிய வர, தான் செய்த தவறை எண்ணி வருத்தப்படும் வேலுச்சாமி, மாயாவை சந்தித்து மன்னிப்பு கேட்க ஊரறிய தன்னை மகளென்று அறிமுகப்படுத்த சொல்கிறார் மாயா. இதற்கிடையே மாயாவை எதிர்த்து பொன்னி எலெக்‌ஷனில் நிற்க முடிவு செய்ய, வேலுச்சாமியை வைத்து பொன்னியை எலெக்ஷனில் இருந்து பின்வாங்க வைக்க மாயா திட்டமிடுகிறார்.இதற்கிடையே ஸ்வேதாவுக்கு குழந்தையை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் கூற, கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார் ஸ்வேதா. இந்த உண்மையை ஸ்வேதா சந்துருவிடம் சொல்வாரா? மாயாவை எதிர்த்து பொன்னி எலெக்‌ஷனில் நிற்பாரா? என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here