நட்சத்திர நடிகர் நிகில் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ஸ்பை’.
அதை தொடர்ந்து டெல்லியில் உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்று நடைபெறவிருக்கிறது. மே 15-ம் தேதியன்று கர்தவ்யா பாதையில் ஸ்பை படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது.
ஆக்ஷன் கலந்த ஸ்பை த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் கே ராஜசேகர் ரெட்டி எழுதி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்த படம் வரும் ஜூன் மாதம் 29-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.
பிரபல பட தொகுப்பாளரான கேரி பி ஹெச் – இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் நிறுவனம்சார்பில் கே. ராஜசேகர் ரெட்டி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இந்த நிறுவனத்தில் சரந்தேஜ் உப்பலபதி தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இந்த படத்தில் நட்சத்திர நாயகன் நிகிலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனனும், இரண்டாவது நாயகியாக சானியா தாக்கூருமா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆரியன் ராஜேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் அபிநவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு செங் குப்தா, நித்தின் மேத்தா, ரவி வர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வம்சி பட்சிபுளுசு மற்றும் மார்க் டேவிட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ சரண் பக்கலா மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.