ரிலீஸுக்கு தயாராய் ‘போர் குடி.’ படத்தின் கதைக்களத்தையும் படப்பிடிப்பு அனுபவத்தையும் விவரிக்கிறார் இயக்குநர் ஆறுபாலா

ஆர்.எஸ்.கார்த்திக் – ஆராத்யா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘போர்குடி’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதிலுள்ள எமோஷன், ஆக்ஷன் மற்றும் காதல் ஆகியவை மற்றொரு கனமான கதையாக பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது என்பதை உணர்த்துகிறது.

ஆறு பாலா இயக்கியிருக்கும் இப்படத்தை ஆர்.தியாகு, ரோல்ஸ்டன் கருப்பசாமி, 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்‌ஷனின் சரவணன் குப்புசாமி மற்றும் யாதவ் ஃபிலிம் புரொடக்‌ஷனின் எஸ்.எஸ்.நந்தகுமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தை வில்லியம் அலெக்சாண்டரின் பிக்சர் பாக்ஸ் கம்பெனி உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது.இந்தப் படத்தின் யதார்த்தத்திற்காக தயாரிப்பாளர்கள் பல இடங்களைத் தேடி, இறுதியாக 2000 கிமீ தூரத்தில் ஒரு பகுதியைக் கண்டறிந்துள்ளனர். இந்த கிராமத்தில் இதற்கு முன் எந்த படமும் எடுக்கப்படாததால் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தர அங்குள்ள மக்கள் முன்வரவில்லை. பின்னர், அங்கு அனைவரும் படப்பிடிப்பின் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறந்த ஆதரவை வழங்கினர்.  இது திட்டமிட்டபடி படப்பிடிப்பை முழுமையாக முடிக்க படக்குழுவிற்கு உதவியது. படப்பிடிப்பின் போது குழு பல சவால்களை எதிர்கொண்டது. குறிப்பாக,  தாங்க முடியாத வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகள். இருப்பினும், படக்குழுவில் கிட்டத்தட்ட அனைவருக்கும் இது முதல் படம் என்பதால் சிறந்த அவுட்புட் கொடுக்க வேண்டும் என்ற பாசிட்டிவ் எண்ணம் மற்றும் எனர்ஜியோடு வேலை செய்தனர்.

இந்தப் படம் எந்த ஒரு சாதியினரையோ அல்லது குறிப்பிட்ட பிரிவினரையோ புண்படுத்தாது என இயக்குநர் ஆறுபாலா தெரிவித்துள்ளார். மனித நேயத்தைப் பற்றிய நல்ல செய்தியைக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களோடு ஈர்க்கும் விதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here