ஆண்டனி தாசனின் தாலாட்டுப் பாடல். பா மியூசிக் மற்றும் கேன்வாஸ் ஸ்பேஸ் இணைந்து வெளியிடும் பாட்காஸ்ட் தொடர்!

சென்னையை தளமாகக் கொண்ட பா மியூசிக், தன்னார்வம் கொண்ட இசைக் கலைஞர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. பா மியூசிக்கும் கேன்வாஸ் ஸ்பேஸும் இணைந்து ஆண்டனி தாசனின் பாடலை, பாட்காஸ்ட்டின் முதல் எபிசோடாக வெளியிடுகிறார்கள்.

பாட்காஸ்டின் தொடக்க எபிசோடில் ஆண்டனி தாசன் இயற்றிப் பாடிய ஒரு தந்தையின் தாலாட்டுப் பாடல் இடம்பெறுகிறது. இது தாய்மார்கள் பாடும் பாரம்பரிய தாலாட்டுப் பாடல்களிலிருந்து விலகி, ஒரு தந்தையாக ஆண்டனி தாசன் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வருகிறார்.

அந்தோணி தாசன், தனது தனித்துவமான குரலுக்காகவும், உள்ளத்தை உருக்கும் வரிகளுக்காகவும் அறியப்பட்டவர். அவர், “இந்தத் தாலாட்டை எழுதுவது எனக்கு ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது. ஒரு தந்தையாக, நான் உண்மையிலேயே ஆழ்ந்த அர்த்தமுள்ள தாலாட்டுப் பாடல் ஒன்றை உருவாக்க விரும்பினேன். என் மனதுக்கு நெருக்கமான இந்த அனுபவத்தை என்னுடைய நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here