சைக்கோ  கொலையாளியை வேட்டையாடும் பயணத்தில் சரத்குமார் & அசோக் செல்வன்! வெளியானது ‘போர் தொழில்’ படத்தின் பரபரப்பான டீசர்.

குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டுவருகிற விதத்திலான பரபரப்பான திரில்லர் திரைப்படம் ‘போர் தொழில்.’ அந்த படத்தின், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசர் வெளியாகியுள்ளது.

கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில்,  ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து  பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி தனது வாழ்வில், மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார்.

அவரது முதல் விசாரணையில் பணியில் வெற்றிபெற, அவருக்கு எதிர்தன்மை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மூத்த காவலருடன் இணைய வேண்டும். ஒன்றாக, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சைக்கோ  கொலையாளியை வேட்டையாடும் பயணத்தில் ஈடுபடுகிறார்கள்.

அதிரடி ஆக்சனுடன் சஸ்பென்ஸ் நிறைந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது. சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடிக்க நிகிலா விமல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை, E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் & எப்ரியஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here