ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பிடிப்பு; யாஷிகா ஆனந்த் படத்துக்கு இசையமைப்பு! -சரசரவென முன்னேறும் இசைக்கலைஞர் பிரபாகரன் மெய்யப்பன்

நடிகை யாஷிகா ஆனந்த் நடித்த ‘சைத்ரா‘ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைத் தாண்டியிருக்கிறது.

 

இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார் பிரபாகரன் மெய்யப்பன். அவரைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள சந்தித்தோம்…

இசைத்துறைக்கு வந்தது எப்படி?

கல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே முறைப்படி கர்நாடக சங்கீதம் மற்றும் மேற்கத்திய சங்கீதத்தை கற்றுக் கொண்டேன். பெற்றோரின் விருப்பத்திற்காக தனியார் நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினேன். இருப்பினும் இசை மீது இருந்த பேரார்வத்தின் காரணமாக இசையமைப்பாளராக வேண்டும் என திட்டமிட்டேன். 2012-ம் ஆண்டில் முதன்முதலாக குறும்படத்திற்கு இசையமைக்க தொடங்கினேன். அதன் பிறகு தற்போது வரை 150 க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இதில் 50-க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு சிறப்பாக இசையமைத்ததற்காக விருதுகளையும் வென்றிருக்கிறேன். ‌பின்னர் ‘முஸ்தபா – தி மேஜிசியன்’ என்ற அனிமேஷன் படத்திற்கு இசையமைத்தேன். இந்தத் படம் 2016-ம் ஆண்டில் ஆஸ்கார் விருதுக்கான சிறந்த அனிமேஷன் படப் பிரிவில் போட்டியிட்டது.

அதை தொடர்ந்து ‘மேகி’ எனும் படத்திற்கு பின்னணி இசையமைத்தேன். தற்போது இயக்குநர் எம். ஜெனித் குமார் இயக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்து வரும் ‘சைத்ரா’ படத்திற்கு இசையமைத்திருக்கிறேன். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற சிங்கிள் ட்ராக்கும் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

எதிர்கால இலட்சியம்?

இசைத்துறையில் முத்திரை பதிக்க வேண்டும். இசை என்பது பெருங்கடல். இங்கு சாதித்தவர்கள் ஏராளம். திரையிசை, சுயாதீன பாடல்கள் என அனைத்து இசை வடிவங்களிலும் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி சிறந்த இசையமைப்பாளராக முன்னேற வேண்டும்.

‘சைத்ரா’ படத்தின் டிரெய்லர்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here