‘தேரு’, ‘ஜிபூட்டி’ போன்ற மலையாளப் படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினு, நடிகர் பிரபுதேவாவை இயக்குகிறார். இவர்கள் இணையும் படத்துக்கு ‘பேட்ட ராப்’ என்பது தலைப்பு.பரபரப்பான, கலகலப்பான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த படத்தில் வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி மற்றும் ரியாஸ் கான் ஆகியோரும் நடிக்கின்றனர்.
‘புளூ ஹில் பிலிம்ஸ்’ ஜோபி பி சாம் தயாரிக்கும் இந்த படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது.வரும் ஜூன் 15, 2023 அன்று புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.
காதல், சண்டைக் காட்சிகள், இசை, நடனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘பேட்ட ராப்’ உருவாக உள்ளது. அதற்கேற்ற வகையில் ‘பாட்டு, அடி, ஆட்டம் – ரிபீட்’ என்ற சுவாரசியமான டேக்லைன் சூட்டப்பட்டுள்ளது.
பிரபுதேவாவை அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிடித்த வகையில் இப்படம் காட்டும் என்று படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். கதை மற்றும் திரைக்கதையை டினில் பிகே எழுதியுள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் இத்திரைப்படம் படமாக்கப்படவுள்ளது. புதுச்சேரி மற்றும் சென்னையில் முக்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட உள்ளன.டி இமான் இசையமைக்க, ஐந்துக்கும் அதிகமான பாடல்களோடு வண்ணமயமாக ‘பேட்ட ராப்’ உருவாகிறது. படத்தொகுப்பாளராக சான் லோகேஷ் மற்றும் கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் பணியாற்றுகின்றனர்.தொழில்நுட்பக் குழுவினர்:
தலைமை இணை இயக்குநர் – சோழன், தயாரிப்பு நிர்வாகி – எம்.எஸ்.ஆனந்த், சசிகுமார் என், பாடல்கள் – விவேகா, மதன் கார்க்கி, ப்ராஜெக்ட் டிசைனர் – துஷார் எஸ், கிரியேட்டிவ் பங்களிப்பு – சஞ்சய் கசல், ஆடை வடிவமைப்பு – அருண் மனோகர், ஒப்பனை – அமல் சந்திரன், ஸ்டில்ஸ் – சாய் சந்தோஷ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், பிரதிஷ் சேகர், வி எஃப் எக்ஸ் – விபின் விஜயன், டிசைன்ஸ் – மனு டாவின்சி.