‘ஷார்ட்ஃபிலிக்ஸ்’ தளத்துக்காக பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள வெப் சீரிஸ் ‘பானிபூரி.’ இதன் பத்திரிகையாளர் சந்திப்பு 18.6. 2023 அன்று சென்னையில் நடந்தது.
கதாநாயகன் லிங்கா, கதாநாயகி சாம்பிகா, முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள வினோத் சாகர், நடிகர் கோபால், எடிட்டர் பிகே, இசையமைப்பாளர் நவநீத் சுந்தர், ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசியபோது, “இருபது வருடங்களாக ரேடியோவில் இயங்கி வருகிறேன். அங்கிருந்து இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் நான் செய்த காரியங்கள் எல்லாவற்றையும் முடிந்தளவு சிறப்பாக செய்திருக்கிறேன். அதற்கு உங்களைப் போல நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் விமர்சனங்களும் தான் காரணம் என நினைக்கிறேன்.
‘நீங்கள் இலைகளை வெட்டலாம், கிளைகளை வெட்டலாம், ஏன் மரங்களை கூட வெட்டலாம் ஆனால், வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது’ என்ற பாப்லோவின் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் என்னதான் கடினமாக உழைத்தாலும் நமக்கான இடம் இன்னும் சரியாக கிடைக்கவில்லையோ என்ற சந்தேகம் பலருக்கும் இருப்பது போல எனக்கும் இருந்தது. அப்போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தியவர் உத்ரா ஸ்ரீதரன். ‘ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். ரேடியோவில் சேர்ந்தபோது அவர் எனக்கு அறிமுகமானார். அவர் மூலமாகத்தான் தயாரிப்பு தரப்பினர் எனக்கு அறிமுகம் ஆகி இந்த மேடையில் ‘பானிபூரி’யோடு நிற்கிறேன்.
இந்த தொடர் ஜாலியான ஒரு கதை என்று சொல்ல முடியாது. நிறைய உலகளாவிய விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறோம். முன்பு ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ பற்றிய கதைகள் வந்த பொழுது குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. ‘காதலை கண்ணியமாக காட்ட முடியாதா என்ன?’ என்ற எண்ணத்தில் உருவாக்கினோம். 15 நாட்களில் படமாக்கினோம். இந்த பானிபூரியை சோளாபூரியாக மாற்றிக் கொடுங்கள்” என்றார்.
ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியபோது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது ‘ஷார்ட் கன்டென்ட்’களுக்கான க்கான தளம். திறமையான இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வேண்டும் என்ற எண்ணத்தில் இதை ஆரம்பித்தோம். ’பானிபூரி’ அதன் தொடக்கமாக இருக்கிறது. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஆதரவு கொடுங்கள்” என்றார்.
தொடரை தயாரித்த ‘ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட்’ ஜெய்சன், ‘‘நாங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் படங்கள் எடுத்திருக்கிறோம். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்கள் எடுத்துள்ளோம். ’பானிபூரி’ கதையை பாலாஜி சொன்னதும் உடனே எடுத்து விடலாம் என்று சொல்லி விட்டேன். கதை நன்றாக வந்திருக்கிறது. ஷார்ட்ஃபிலிக்ஸ் வரும் காலத்தில் பெரும் வெற்றி பெறும்” என்றார்.
நிகழ்வில் பேசினார்கள்.