‘பூங்கா நகரம்’ டைட்டில் லுக்கை வெளியிட்ட நடிகர் கிருஷ்ணா!

இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்த ஈ.கே.முருகன் இயக்கும் படம் ‘பூங்கா நகரம்.’

காமெடி கலந்த ஹாரர், த்ரில்லர் படைப்பாக உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் கிருஷ்ணா வெளியிட, அது பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஹமரா சிவி இசையமைக்கிறார். எடிட்டிங் பணிகளை சி.எம்.இளங்கோவன் கவனிக்கிறார்.

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன்.ஈ‌‌.நடராஜ் தயாரிக்கிறார்.

விரைவில் படத்தின் நாயகன், நாயகியுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here