சிலை கடத்தல் பின்னணியில் சரத்குமார் நடிக்கும் ‘பரம்பொருள்’ படத்தின் பரபரப்பான டிரெய்லரை வெளியிட்ட இயக்குநர் மணிரத்னம்!

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் – இளம் நடிகர் அமிதாஷ் நடிக்க, சிலை கடத்தல் குற்றங்களின் பின்னணியை கதைக்களமாக கொண்டுள்ள படம் ‘பரம்பொருள்.’

படத்தின் கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் பரப்பரப்பான டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் இணைந்து வெளியிட்டனர். நிகழ்வில் இயக்குந‌ர் சி. அரவிந்த் ராஜ், ‘‘படத்தின் கதையை சொன்னவுடன் சரத்குமார் சாருக்கும் அமிதாஷுக்கும் மிகவும் பிடித்தது. சின்ன பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாள‌ர்களின் ஆதரவால் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும்’ என்றார்.

நடிகர் சரத்குமார், ‘‘இது குழு முயற்சி. திரையரங்குகளில் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம்” என்றார்.

நடிகர் வின்சன்ட் அசோகன், ‘‘இந்த படத்தில் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் சிறப்பு அதன் திரைக்கதை” என்றார்.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன், ‘‘சரத்குமார், சார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘போர்த்தொழில்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ‘பரம்பொருள்’ படத்தை பார்த்து ரசித்து வெளியிட விரும்பினேன். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. நல்லதொரு கதையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அமிதாஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம். ‘பரம்பொருள்’ நிச்சயம் வெற்றியடையும்” என்றார்.

இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் அமிதாஷ், தயாரிப்பாளர்கள் மனோஜ் & கிரிஷ், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர் பாலகிருஷ்ணன், கலை இயக்குந‌ர் குமார் கங்கப்பன், ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி, நடன இயக்குந‌ர் சதீஷ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

படம் செப்டம்பர் 1 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான இந்த படத்தை ‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.

உருவாக்கத்தில் உறுதுணை:- யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ‘ரிச்சி’ படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘டான்’, ‘சாணிக் காயிதம்’, ‘ராக்கி’, ‘எட்டு தோட்டாக்கள்’ படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி பணியாற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here